90ஸ் கிட்ஸ்களுக்கு சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் தான். இன்றளவும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் இளமையை இனிமையாக்கிய தொடர் இந்த தொடர். இதில் ஹீரோவாக முகேஷ் கண்ணா நடித்து இருந்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இந்த தொடரின் மூலம் உருவாகி உள்ளது. தற்போது சக்திமானை படமாக இயக்க முடிவெடுத்து இருந்தார் முகேஷ் கண்ணா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில காரணங்களால் தடைபடவே, தற்போது அவரே கதாநாயகனாக நடிக்க உள்ளார். சக்திமான் தொடரின் 2 வது சீசன் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகி உள்ளது. இந்த படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 62வயதிலும் தற்போது மீண்டும் சக்திமானாக முகேஷ் கண்ணா நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram