நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருந்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் படம் அதிக மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இப்படம் அக்டொபர் 10ஆம் தேதி வெளியாக இருந்தது.
அன்று சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படமும் வெளியாக உள்ளதால் வசூலுக்கு பாதிப்பு வரும் என கூறி கங்குவா ரிலீஸ் தேதியை தள்ளிவைத்து உள்ளது படக்குழு. இப்படம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி தனியாக வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.