லோகேஷ் கனகராஜ் போல மிமிக்ரி செய்த விஜய்!!

லோகேஷ் கனகராஜ் போல மிமிக்ரி செய்த விஜய்!! 1

கார்த்தி நடித்து வெளியான கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ்கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. லோகேஷ்கனகராஜும் அமலாபால் நடித்த ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமாரும் நெருங்கிய நண்பர்கள்.

கைதி படத்தில் கிளைமாக்ஸில் ஆயுதத்தை பயன்படுத்தியது போல் தளபதி 64 படத்தில் என்ன ஆயுதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளாய் என்று லோகேஷ் கனகராஜிடம் இணைய தள டிவிட்டர் பக்கம் மூலம் கேட்டிருந்தார் ரத்னகுமார்.

விளம்பரம்

இந்நிலையில் ரத்னகுமார் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவருக்கு லோகேஷ் கனகராஜிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் ‘மச்சி ஹேப்பி பர்த்டே டா..’ என்றார். அதற்கு ரத்னகுமார் நன்றி தெரிவித்தார். பிறகுதான் தெரிந்தது தன்னுடன் பேசியது லோகேஷ் இல்லை அவரது குரலில் மிமிக்ரி செய்து விஜய்யே தன்னிடம் பேசி வாழ்த்து கூறினார் என்பது.

இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரத்னகுமார் வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு மதிப்பிருக்கிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment