விரதம் இருக்கும் நயன்தாரா!

விரதம் இருக்கும் நயன்தாரா! 1

நயன்தாரா கடவுள் பக்தி கொண்டவர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கமாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருவதுடன், படங்களில் தனது முன்னணி நடிகை அந்தஸ்த்தை தக்க வைத்து கொண்டுள்ளார். இதற்கிடையில் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்தும் கொண்டிருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங்கில் ஈடுபடு கின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா விரதம் மேற்கொள்ள இருபதாக தகவல் வெளியாகி இருக்கிறது கன்னியாகுமரி அம்மனின் கதையாக உருவாகிறது மூக்குத்தி அம்மன். இதில அம்மன் வேடம் போட்டு நடிக்க தயாராகி வருகிறார் நயன்தாரா. நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தை இயக்குகிறார்.

விளம்பரம்

அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நயன்தாராவிடம் பாலாஜி, கேட்ட போது,’அம்மன் படத்தில் நடிப்பதற்கு சுத்த பத்தமாக இருக்க வேண்டியது அவசியம் என்றார். படப்பிடிப்பு தொடங்கி முடியும் வரை நான் விரதம் இருந்து நடிக்கப்போகிறேன். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்தபோது விரதம் மேற்கொண்டு தான் நடித்தேன். அதுபோல் இப்படத்துக்கும் விரதம் இருந்து நடிப்பேன்’ என்றார்.

விளம்பரம்

Leave a Comment