செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. அந்த வீடியோவை அவர் தங்களது youtube வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருப்பவர் கண்மணி சேகர். இவருக்கும் சின்னத்திரை நடிகர் நவீனுக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்திருந்தது. இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்து இருந்தார் கண்மணி. அவருக்கு தற்போது வளைகாப்பு நடந்து முடிந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த வளைகாப்பின் முழு வீடியோ தொகுப்பை அவர் தற்போது தனது youtube வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். டிக் டாக் செயலியின் மூலமாக பிரபலமானவர் நவீன். இவர் டிக்டாக் இருந்தபோது வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பின்னர் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார் நவீன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் இவருடன் நடித்த ஹீமா பிந்துவுக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. நவீன் தன்னுடைய குடும்ப நண்பரான கண்மணியை திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தியிருந்தனர். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கண்மணி மற்றும் நவீன் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு வீடியோவை பதிவிடும்போது கண்மணியின் வயிறு பெரிதாக இருந்த காரணத்தினால் கண்மணி கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால் உண்மையில் கண்மணி கர்ப்பமாகத்தான் இருந்தார். பின்னர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து மறைக்கும் எண்ணத்தில் நாங்கள் சொல்லாமல் இல்லை, சர்ப்ரைஸ் ஆக சொல்லலாம் என்று இருந்தோம் அதற்குள் நீங்களே கண்டுபிடித்து விட்டீர்கள் என்று விளக்கம் அளித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது நவீன் தனது கனவு தொழிலாக இருக்கும் டீக்கடை ஒன்றை திறந்து இருக்கிறார். பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடையை திறந்த அவர் அந்த வீடியோவை Vlog ஆக எடுத்து பதிவிட்டிருந்தார். இதற்கிடையில் கண்மணிக்கு தற்போது வளைகாப்பு நடந்திருந்தது. அந்த வீடியோவை நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. கண்மணி நவீன் தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Navin Kanmani