2000ஆம் தொடக்கங்களில் சீரியல்கள் என்றால் அது சன் டிவி தான். சித்தி, மெட்டிஒலி, கோலங்கள், வம்சம், நாதஸ்வரம் என வரிசையான மக்களின் மனம்கவர்ந்த தொடர்கள் பலவற்றை ஒளிபரப்பி வந்து முதல் இடமில்லை, ஒரே இடம் அந்த சேனலுக்கே இருந்தது. சில ஆண்டுகளில் சேனல் எண்ணிக்கைகள் பெறுக பல சேனல்கள் அடுத்தடுத்து தொடர்களை ஒளிபரப்ப துவங்கின.

முன்னணி திரை நாயகிகள் கூட, கொஞ்ச நாட்கள் கழித்து மார்க்கெட் போன பின்னர், சன் டிவி நோக்கி படையெடுத்த காலம் மாறி பலவேறு சேனல்கள் முந்த துவங்கின. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் விஜய் டிவி முழுவதுமாக ஆட்சி புரிய துவங்கியது. இதனால் சன் டிவி கொஞ்சம் சறுக்கலை சந்திக்க துவங்கியது. கொஞ்ச காலம் பொறுத்து, இப்பொது மீண்டும் புது வகையிலான தொடர்களை ஒளிபரப்ப துவங்கியுள்ளது அந்த நிறுவனம்.
இப்பொது சன் டிவியில் மக்களிடம் நல்ல விமர்சங்களை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் கண்ணனே கண்ணே. நடிகர் பாப்லு முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த் தொடரிலில் அப்பா மகள் பாசத்தையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டுவருகிறது. இந்த சீரியல் ஒரு குழந்தை பிறக்கும் பொழுதே அவருடைய அம்மா இறந்த நிலையில் அந்த குழந்தையை அவருடைய அப்பா வெறுத்து வருகிறார். தனது அப்பாவின் அன்பிற்காக ஏங்கும் அந்த பெண் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது கணவனிடம் இருந்து அந்த அன்பை பெறுகிறார்.
அந்தப் பெண் தான் மீரா என்ற கதாபாத்திரம். இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினாக நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார் நாயகி. இப்படிப்பட்ட நிலையில் தற்போது திடீரென யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் வர இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் இறந்து விட்டதால் அவரை இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட வருகிறது.
மேலும், இதற்க்கான காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வெளியான தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.