நேற்று நடைபெற்ற புத்த வெளியிட்டு விழா ஒன்றில் நடிகர் ரஜினி, உருக்கமாக அந்த சன்யாசிகளிடம் இருக்கும் நிம்மதி தனக்கு இல்லை என உருக்கமாக மேடையிலேயே பேசியுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சம் தோட்ட நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினி. ரஜினிக்கு முன், ரஜினிக்கு பின் என இப்போதுள்ள தமிழ் சினிமாவை வகுக்கும் அளவிற்கு உச்சம் பெற்றுள்ளார் அவர். எம்.ஜி.ஆர் நல்ல மனிதனாக, மக்களுக்கு உதவுபவராக, பெண்களை மதிப்பவராக நடித்து மிக பெரிய உட்சமடைந்தார். பின்னர் இருந்த நாயகர்கள் பலரும் இதே பாணியை பின்பற்ற துவங்கினார்கள்.

இதனை மாற்றி முற்றிலும் கெட்டவனாக, ரௌடியாக, முரட்டு குணம் கொண்ட நடிகனாக திரையில் தோன்றி புதிய கதாபாத்திரங்கள் மூலமாகவும், சிறந்த நடிப்பாற்றலாலும் புதிய ட்ரெண்ட் செட் செய்தார் ரஜினி, அதன் பின் அவர் தான் தமிழ் சினிமாவின் உச்சம். கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலும் தலை காட்ட துவங்கிய அவர், 1996ஆம் மிகவும் தீவிரமாக அதறகான வேலைகளை செய்து, பின்னர் அமைதியாக ஒதுங்கினார்.

ரஜினி அரசியலுக்கு வரும் முனைப்பை காட்டிய போதெல்லாம் அவர் மேல் வைக்கப்பட்ட மிக பெரிய குற்றச்சாட்டு அவர் தமிழர் அல்ல என்பதே.வேறு மாநிலத்தில் இருந்து வந்து இங்குள்ள மக்களை ஏமாற்றியவர் என்ற பெயரை கொண்டும் நிறைய பேர் ரஜினியை வஞ்சித்தனர். இது மிகவும் சூடு பிடிக்கவே, 2021ஆம் தேர்தலில் களம் இறங்க முற்பட்டு அப்போதும் உடல்நல கோளாறால் பின் வாங்கினர். இதுவும் அவர் மேல் பெரிய குற்றச்சாட்டுகளை வைக்க துவங்க உதவியது.

70 வயதை கடந்தும் இன்றும் சினிமாவின் உட்சாணி கொம்பில் யாரும் தொட்டிட முடியாத ரஜினியை, விமர்சகர்கள் வஞ்சிப்பது எப்போதும் சகஜமே. இது இப்போதும் வெளிப்பட்டுள்ளது. நேற்றைய பேச்சில், “சந்நியாசிகளால் பெற முடிந்த நிம்மதியை தன்னால் பெற முடியவில்லை” என ரஜினி பேச அது முதல் சோசியல் மீடியாக்களில் அது தான் முதல் ட்ரெண்ட்.

இப்பொது அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சினிமா விமர்சகர் மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சினிமாவுல பண்ண மாதிரியே நிஜத்துலயும் உங்களோட சொத்துக்களை எழுதி வெச்சிருங்க..அப்புறமா போய் நிம்மதியா இனமயமலையில தேடுங்க” என எழுதி வைரலான அந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
