விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே என்கிற சீரியலில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் தற்போது விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் ஒருவர் ஹீரோவாக கமிட்டாகி இருக்கிறார். அந்த செய்தி தற்போது கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக ராம் என்கிற கதாபாத்திரத்தில் நந்தகோபாலும், பானுவாக பவித்ரா அரவிந்தும் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் குழந்தை சம்யுக்தா, ராஷ்மி பிரபாகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலின் கதை குறித்து பார்த்தோம் என்றால் ராமுக்கும் பானுவுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தையும் இருக்கிறது. பின்னர் பானுவுக்கு ஒரு விபத்தில் கண்பார்வை பறிபோகிறது. ராமுக்கும் நினைவுகள் இழந்து விடுகிறது. பின்னர் அவர் பானுவுடன் நடந்த திருமணத்தை மறந்து மாதுரி என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில் பானுவுக்கு தற்போது கண் பார்வை திரும்பி விட்டது. தன்னுடைய கணவர் தான் ராம் என்கிற உண்மையை இத்தனை நாள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்த பானு மீண்டும் ராமுடன் இணைந்து விட்டார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த நந்தகோபால் தற்போது விலகி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றி புதிய ராமாக களம் இறங்கி இருக்கிறார். இந்த ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நந்தகோபால் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. வழக்கம் போல நடிகர்கள் சீரியலில் இருந்து விலகும் போது பிக்பாஸுக்கு செல்ல இருக்கிறார்கள் என்கிற வழக்கமான வதந்தி தற்போது நந்தகோபால் விலகலுக்கும் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!