தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது டெங்குவால் படுத்த படுக்கையாக இருக்கும் சுடரை பார்க்க விடாமல் வெற்றியை அபி தடுக்கிறார். இதனால் கடுப்பான வெற்றி இது முதலில் உன் குழந்தையே கிடையாது. விஜி அம்மாவின் குழந்தை தானே? நீ எதற்கு எனக்கு தடுக்கிறாய்? அதற்கு உனக்கு உரிமை கிடையாது என்று கோபமாக சண்டை போட்டுவிட்டு சுடரை பார்க்க செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தை சுடரை இத்தனை நாட்களாக விஜய்யின் குழந்தை என்று சொல்லி அவரை ஏமாற்றி வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெற்றிக்கு சுடர் தான் தன்னுடைய மகள் என்பது தெரிந்து விட்டது. அபி ராஜஸ்தானில் சென்று கலெக்டருக்கு படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வைத்து சுடர் பிறந்ததால் ராஜஸ்தான் வரை சென்று சுடர் தன் மகள் என்பதை தெரிந்து கொள்கிறார் வெற்றி. கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சுடர் படுத்த படுக்கையாக கிடக்கிறார். மேலும் அவர் சிம்பா சிம்பா என்று சொல்லி தனது தந்தையான வெற்றியைத் தேடிக் கொண்டிருக்கிறார். வெற்றிக்கு ஏதோ உள்ளுணர்வு சொல்லி அவர் சுடரைத் தேடி அபியின் வீட்டிற்கு வருகிறார்.

அப்போது அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி அபி மிகவும் அசிங்கப்படுத்துகிறார். இதனால் கடுப்பான வெற்றி சுடர் முதலில் முன் குழந்தையா? விஜி அம்மாவின் குழந்தை தானே.? என்னை வெளியே போக சொல்வதற்கு உனக்கே உரிமை கிடையாது, என்று சொல்லி சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television