கேரளா டூருக்கு சென்ற பாக்யாவுக்கு வந்த புது பிரச்சனை.! நடு ரோட்டில் இறக்கிவிட்டு ஓடிய கார் டிரைவர்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இனியா, ஈஸ்வரி, செல்வி பாக்யா என நான்கு பேரும் சேர்ந்து காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது நடு வழியில் கார் ஓட்டுனருக்கு அவசர தேவை என்று அவர் பாதி வரியில் இறங்கி ஓடுகிறார். அப்போது காரை எடுத்துக்கொண்டு சிங்கப் பெண் போல புறப்பட்டு செல்கிறார் பாக்யா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேரளா டூருக்கு சென்ற பாக்யாவுக்கு வந்த புது பிரச்சனை.! நடு ரோட்டில் இறக்கிவிட்டு ஓடிய கார் டிரைவர்.! 1

விளம்பரம்

பாக்கியலட்சுமி தொடரில் இனியா தன்னுடைய கல்லூரியின் ப்ராஜெக்ட் ஒன்றிற்காக கேரளாவுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரது தந்தை கோபியை அவர் நச்சரித்துக் கொண்டிருந்த நிலையில், கோபியின் இரண்டாவது மனைவியின் மகளாக இருக்கும் மயூ பருவமடைந்து விட்டதால் அவரால் வர முடியவில்லை. எனவே பாக்யா, ஈஸ்வரி, செல்வி, இனியா என அனைவரும் கிளம்பி செல்கின்றனர். அப்போது காரை ஓட்டிக்கொண்டு வந்தவரின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டது என்று சொல்லி நடுவழியில் காரை நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார்.

தொடர்புடையவை  விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஜூலி.! எந்த சீரியல் தெரியுமா?

கேரளா டூருக்கு சென்ற பாக்யாவுக்கு வந்த புது பிரச்சனை.! நடு ரோட்டில் இறக்கிவிட்டு ஓடிய கார் டிரைவர்.! 3

விளம்பரம்

அப்போது பழனிச்சாமிக்கு போன் செய்யும் பாக்யா நடந்ததை விவரமாக கூற அவரும் நீங்கள் தான் கார் நன்றாக ஓட்டுவீர்களே நீங்களே எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக சென்று வாருங்கள் என்று கூற பாக்யாவிற்கு தைரியம் வருகிறது. உடனே அவர் காரை எடுத்துக் கொண்டு செல்கிறார். அந்தப் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment