தமிழ் சின்னத்திரை உலகில் காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அமீர் மற்றும் பாவனி இருவரும் தற்போது காதலித்து வரும் நிலையில் மாலையும் கழுத்துமாக அமீரும் பாவனியும் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கின்றனர். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நடந்திருக்கும் விஷயமே வேறு.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன தம்பி நாடகத்தின் மூலமாக மக்கள் மனங்களை இடம் பிடித்தவர் பாவனி ரெட்டி. தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்த இவர் முதலில் ரெட்டைவால் குருவி என்கிற நாடகத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது சின்ன தம்பி தான்.

இதன் மூலமாக அவருக்கு பிரபலம் ஏற்பட்டது. இந்த பிரபலத்தை கொண்டு அவர் பிக் பாஸில் கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் ஐந்தில் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இதே நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். ஆரம்பத்தில் அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் பாவனி இருந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் நடனமாடி பரிசையும் வென்றிருந்தனர். ஆடவே தெரியாத தன்னை ஆட வைத்து டைட்டிலையும் வென்றதால் அமீரின் காதலை ஏற்றுக் கொள்வதாக பாவனி அறிவித்திருந்தார். அன்றைய நாள் தொடங்கி இன்றைய நாள் வரை இருவரும் காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சினிமா வாழ்க்கையில் புதிய உயரத்தை எட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் இருவரும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இன்று அமீருடன் மாலையும் கழுத்துமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார் பாவனி. இதை பார்த்த பலரும் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கேள்வியை எழுப்பி வந்தனர். ஆனால் இன்று அமீரின் பிறந்தநாள் என்பதால் சில அழகான தருணங்களை புகைப்படங்களாக பகிர்ந்து இருக்கிறார் பாவனி. என்னுடைய ஒரே ஒரு சூப்பர் மேன், அயர்ன் மேன், என் ஹீரோ, என்னுடைய ஹேண்ட்சம் எல்லாமே இந்த பையன் தான்.

அவனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒன்றாக சிரிக்கவும், குழப்பவும் இதோ மற்றொரு வருடம். உன்னை தவிர வேறு யாராலும் என்னை இந்த அளவிற்கு அன்பை உணர வைக்க முடியாது. நான் ஒரு பட்டாம்பூச்சியை போல உணர்கிறேன். உன்னுடன் இருக்கும் பொழுது ஒரு மிருகக்காட்சி சாலையை முழுவதுமாக உணர்கிறேன். லவ் யூ பூபூ என்று அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அமீர் மற்றும் பாவனி ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.