பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிறையிலிருந்து மீண்டும் திரும்பி வரும் கண்ணன் முதல் முறையாக தனக்கு பிறந்த மகளை கைகளில் வாங்குகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. தமிழ் சின்னத்திரை உலகில் குடும்ப பாங்கான கதைகளை எடுப்பதில் முன்னிலை வகித்து வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மக்களின் மனம் கவர்ந்த தொடராக இது இருந்து வருவதால் இன்றளவும் இந்த நாடகத்திற்கான ஆதரவு சற்றும் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கடைசி தம்பியாக இருக்கும் கண்ணன் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவரது நற்பெயரை கொடுக்க மேலதிகாரி சதி திட்டம் தீட்டுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணன் லஞ்சம் வாங்கி விட்டதாக அவர் மீது பொய் புகார் கூறி அவரை சிறைக்கு அனுப்ப மேலதிகாரி முயற்சி செய்கிறார். அந்தத் திட்டத்தில் அவர் வெற்றியும் பெறுகிறார். கண்ணன் மேசையில் பணத்தை வைத்து அவரை லஞ்ச அதிகாரிகளிடம் சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பி இருக்கிறார் மேலதிகாரி. இந்த அதிர்ச்சி செய்தியை கேட்ட கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஜெயிலில் அடைக்கப்பட்ட கண்ணன் தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்த அவர் நேராக வீட்டிற்கு வருகிறார். அப்போது மூர்த்தியின் கால்களில் விழுந்து நான் எந்த தவறும் செய்யவில்லை தன் மீது வீண் பழி சுமத்தி இருக்கிறார்கள் என்று சொல்லி காலில் விழுந்து கதறி அழுகிறார். ஆனால் மூர்த்தியோ கண்ணனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து விலகிச் சென்று விட்டார்.

பின்னர் ஐஸ்வர்யாவிடம் செல்லும் கண்ணன் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் மீனா கண்ணனின் குழந்தையை கைகளில் வந்து கொடுக்கிறார். அப்போது அதை பார்த்த கண்ணன் நீ பிறக்கும்போது உன் கூட அப்பா இல்லாமல் போய் விட்டேனே என்று சொல்லி கதறி அழுகிறார். மனதை உருக்கும் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television