விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்றன்பின் ஒன்றாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் நாளையுடன் ஒரு சீரியலை விஜய் டிவியில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது. அதன் இறுதி கட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சியாக இருந்து வருகிறது விஜய் டிவி.

இதன் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. இதில் பல சீரியல்கள் முடிவு பெறும் தருவாயில் இருந்து வருகின்றன. பல புதிய சீரியல்கள் வர இருப்பதால், பழைய சீரியல்கள் பலவற்றை முடிக்க விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது.
கடந்த வாரம் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வாரம் ஒரு தொடரை முடிக்க விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது. ஈரமான ரோஜாவே 2 யாரும் எதிர்பாராத விதமாக திடீரென முடிவடைந்து இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்த வாரமே இன்னொரு மெகா ஹிட் தொடரை முடிக்க இருக்கின்றனர்.
சமீப காலமாக ‘காற்றுக்கென்ன வேலி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘ஈரமான ரோஜாவே 2’ என மக்களின் மனம் கவர்ந்த தொடர்கள் ஒன்றன்பின் ஒன்றாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது ‘கண்ணே கலைமானே’ தொடரும் இணைந்து இருக்கிறது.
பானு என்கிற பெண்ணை ராம் என்பவர் திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் மனைவியைப் பிரிந்து சென்னைக்கு நடிப்பதற்காக செல்லும் அவர் பின்னர் மிகப்பெரிய நடிகராகும் அவர், ஒரு விபத்தில் பழைய நினைவுகளை இழந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அவரது மனைவி பானுவும் மகளும் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பானுவுக்கும் விபத்தில் கண் பார்வை பறிபோகிறது. பின்னர் பானுவும் ராமுவும் எப்படி இணைந்தார்கள்? பானுவிற்கு கண்பார்வை வந்ததா? என்பது குறித்த கதையாக தான் இந்த கதை நகர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரமே ‘ஈரமான ரோஜாவே’ தொடருடன் இந்த சீரியலையும் முடிக்க போவதாக தகவல் வெளியான நிலையில்_ மதியம் நான்கு மணிக்கு சீரியல் ஒளிபரப்பாகும் என்று நேரத்தை மட்டுமே மாற்றி அமைத்து இருந்தனர்.
ஆனால் ரசிகர்களிடையே சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்தத் தொடரை முடிக்க சீரியல் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கு பதிலாக ‘சக்திவேல்’ என்கிற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை நாடகத்தில் பானு கதாபாத்திரத்தில் நடிக்கும் பவித்ரா அரவிந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்துள்ளார். நாளை மாலை 4 மணிக்கு இதன் கடைசி எபிசோடு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..!