தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் தான் சினேகன். பாண்டவர் இல்லம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகி இன்று பல பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே மாபெரும் ஹிட் அடித்து இருக்கிறது. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கடுமையான விமர்சனங்களையும் பெற்று இருந்தார் சினேகன்.

பின்னர் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியிலும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இவர்களின் திருமணத்தை உலகநாயகன் கமல்ஹாசன் முன் நின்று நடத்தி வைத்து இருந்தார். தற்போது இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் இருவரும் பெற்றோர்கள் ஆக போவதாக மகிழ்ச்சியாக அறிவித்து இருந்தனர். தற்போது கன்னிக்காவிற்கு 5வது மாத வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.