கை குழந்தைகளுடன் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட பெண்.! நெகிழ வைத்த உமா ரியாஸ்..!

தனது திருமண நாளன்று ஆதரவற்ற ஒரு தாயையும் மகளையும் பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உமாரியாஸ் விருந்து வைத்துள்ளார். அந்த வீடியோவை தற்போது அவர் தனது youtube சேனலில் பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உமாரியாஸ் ஒரு தமிழ் பட நடிகை ஆவார். மேலும் இவர் தற்போது தொலைக்காட்சிகளிலும் நடித்து வருகிறார். இவரது தந்தை காமேஷ் ஒரு இசையமைப்பாளராக இருந்தவர். இவரது தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை ஆவார். இவர் விசு நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். உமா ரியாஸின் தந்தை சிறுவயதிலேயே மரணம் அடைய உமா ரியாசை அவரது தாயார் தான் வளர்த்து வந்துள்ளார். பின்னர் இவர் திரைப்பட நடிகர் ரியாஸ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கை குழந்தைகளுடன் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட பெண்.! நெகிழ வைத்த உமா ரியாஸ்..! 1
ரியாஸ்கான் புகழ் பெற்ற பாடி பில்டர் ஆவார். இவரும் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்த வின்னர் திரைப்படம் மிகப்பிரபலம். இந்த தம்பதிகளுக்கு ஷாரிக் சமந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஷாரிக் பிக்பாஸில் பங்கேற்றுள்ளார். உமாரியாஸ் குத் வித் கோமாளி சீசன் 1ல் பங்கேற்றார். இந்த சீசனில் இவர் இரண்டாவது இடத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உமாரியாஸ் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் தனது திருமண நாளை ஒட்டி வீடு இல்லாமல் தவித்து வந்த ஒரு குழந்தையையும், அவரது அம்மாவையும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "உன் துணைக்கு நான்தான்".! தனுஷை பார்த்து இளையராஜா செய்த செயல்.! நெகிழ்ந்து போன தனுஷ்.!

கை குழந்தைகளுடன் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட பெண்.! நெகிழ வைத்த உமா ரியாஸ்..! 3

வீடு இல்லாமல் தெருவோரத்தில் பொம்மை விற்று வரும் ஒரு பெண்மணியையும், அவரது குழந்தையையும் அவர் ஒரு நாள் பார்த்துள்ளார். அந்த பொம்மை விற்று வரும் வருமானத்தில் தான் அவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மதிய உணவு வாங்கி கொடுத்து தன்னுடைய திருமண நாளை கொண்டாடி இருக்கிறார் உமாரியாஸ். மேலும் அவர்களை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அந்த குழந்தைக்காகம் ஹார்லிக்ஸ்-ம் வாங்கி கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் உமாவின் இந்த நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். அவர் கூறும் பொழுது நான் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் என்னுடைய மனம் தற்போது நிரம்பி இருக்கிறது என்று கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Uma Riyaz

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment