Categories: சினிமா

முதல் திருமண நாளுக்கு மனைவி கன்னிகாவுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த சினேகன்

வெளியிட்டது

கவிஞர் சினேகனும், அவரது மனைவி கன்னிகாவும் தங்களது முதலாவது திருமண நாள் விழாவை ஒரு ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் பல நல்ல பாடல்களை கொடுத்தவர் சினேகன். ராம் படத்தில் வரும் ஆராரிராரோ நான் இங்கே பாட, பாண்டவர் பூமியில் வரும் அவர் அவர் வாழ்க்கையில் போன்ற பல நல்ல பாடல்களை நமக்கு அளித்தவர். தற்போது கூட விருமன் படத்தில் மதுரவீரன் என்ற பாடலை கூட அவர் தான் எழுதி இருக்கிறார். இவர் 700க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவு பிரபலமாக இல்லாத அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரைப் பற்றி இணையத்தில் தேடிய பலர் ஓ! இந்த பாடல்கள் எல்லாம் இவர்தான் எழுதி இருக்கிறாரோ? என்று அவரை புகழ்ந்து வந்தனர். அதனால் பிக்பாஸில் இருக்கும் போது அவருக்கு ஆதரவும் பெருகியது.

முதல் திருமண நாளுக்கு மனைவி கன்னிகாவுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த சினேகன் 1

பிக்பாஸில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாவது இடத்தையே பெற்றார். பின்னர் வெளியே வந்த அவர், கமலஹாசனின் மக்கள் நீதி மையத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அந்தக் கட்சியின் சார்பில் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தனது காதலியான கன்னிகாவை திருமணமும் செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை கன்னிகாவும், சினேகாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் உலக நாயகன் கமலஹாசன் முன்னிலையில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம் இருக்கிறது. திருமணத்தின்போது பலரும் இவர்களை கலாய்த்தனர். உங்களை பார்த்தால் கணவன் மனைவி போல் இல்லை, அப்பா மகள் போல் இருக்கிறீர்கள் என்று சினேகனையும் கன்னிகாவையும் பலரும் மனம் நோகும்படி பேசினர்.

 

ஆனால் இது போன்ற விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத இருவரும் மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தாங்கள் வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வெளிகாட்டி வருகின்றனர். சினேகனுடன் இணைந்து ரொமான்ஸ் செய்வது, Vlogs செய்வது, ஓவியம் வரையும் தருணங்கள், சமைக்கும் வீடியோக்கள் என்று மிக அழகான தருணங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் கன்னிகா. திருமண நாளின் போது ஆதரவற்ற இல்லம் சென்று அங்கு அவர்களுக்கு உணவு வழங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மற்றொரு வீடியோவை பகிர்ந்து தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். அதில் ஒரு ஹோட்டலில் சினேகாவும் கனிகாவும் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடுகிறனர். அந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்