கிறிஸ்துவராக இருந்த போதும் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அழகு பார்த்த சாண்டி! வைரலாகும் புகைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் 2005ம் ஆண்டு ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கோரியோகிராபராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி மாஸ்டர். பிரபல நடன கலைஞரான கலா மாஸ்டர் தான் சாண்டிக்கு இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தார். பின்னர் இவருக்கு பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக தன்னை உயர்த்தி கொண்ட சாண்டி கிங் ஆப் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் இவருக்கு தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடன இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் பல படங்களுக்கு நடன இயக்குனராக இருந்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி 500 கோடி வசூலை நெருங்கி இருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் கூட சாண்டி தான் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

கிறிஸ்துவராக இருந்த போதும் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அழகு பார்த்த சாண்டி! வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

இவர் சென்னையில் சொந்தமாக நடன பள்ளி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நடனம் சொல்லிக் கொடுத்தும் வருகிறார். இந்த புகழினால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 3 இவ்வளவு சுவாரஸ்யமாக சென்றதற்கு சாண்டியும் முக்கிய காரணமாகும். அதற்குப் பின் வந்த சீசன்கள் எதுவும் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. பிக்பாஸ் சீசன் 3 என்றால் இன்னமும் பசுமையாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் சாண்டி, முகேன், கவின், தர்ஷன், லாஸ்லியா அனைவரும் சேர்ந்து அடித்த லூட்டிகள் தான் காரணம். இதற்குப் பின்னர் சாண்டிக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. சாண்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவருக்கு முதல் திருமணம் காஜல் பசுபதியுடன் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது.

தொடர்புடையவை  "OTT'யில் வெளியான "தி கிரே மேன்"!! புலம்பும் ரசிகர்கள்"!!

கிறிஸ்துவராக இருந்த போதும் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அழகு பார்த்த சாண்டி! வைரலாகும் புகைப்படம் 3

விளம்பரம்

இரண்டாவதாக அவர் சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. முதலில் லாலா என்ற பெண் குழந்தையும், இரண்டாவதாக ஷாம் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று கோகுலாஷ்டமி என்பதினால் தனது மகன் ஷாமுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு போட்டோ சூட் நடத்தி இருக்கின்றனர் சாண்டியும் அவரது மனைவியும், கிறிஸ்தவராக இருந்த போதிலும் மத வேறுபாடுகளை கடந்து அவர்கள் கோகுலாஷ்டமி கொண்டாடி இருப்பது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவரது மனைவி சில்வியா எங்கள் வீட்டு கிருஷ்ணர் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் கீழே அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கிறிஸ்துவராக இருந்த போதும் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அழகு பார்த்த சாண்டி! வைரலாகும் புகைப்படம் 5 கிறிஸ்துவராக இருந்த போதும் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அழகு பார்த்த சாண்டி! வைரலாகும் புகைப்படம் 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment