“தமிழன் தமிழன்’னு சும்மா சொல்லிட்டே இருக்கோம்……ஆனா அப்படி என்னடா பண்ணீங்கன்னு கேட்ட நம்பக்கிட்ட பதில் இல்ல” – கார்த்தி”!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் மிக முக்கிய படமாக இப்பொது வெளிவரவிற்கும் படம் “பொன்னியின் செல்வன்”. தமிழ் கலையுலகில் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி கிரிஷ்ணமூர்த்தி. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், தியாக பூமி, பார்த்திபன் கனவு, அலை ஓசை போன்ற பல சிறப்பு மிகு நாவல்களை எழுதியுள்ளார். இவர் சாகித்ய அகாடமி விருது வென்றவர். 1950இல் சோழ சாம்ராஜ்யத்தை மையமாக வைத்து இவர் இயற்றிய புனைகதையான ” பொன்னியின் செல்வன்” மிக சிறந்த வரவேற்ப்பை அப்போதே பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"தமிழன் தமிழன்'னு சும்மா சொல்லிட்டே இருக்கோம்......ஆனா அப்படி என்னடா பண்ணீங்கன்னு கேட்ட நம்பக்கிட்ட பதில் இல்ல" - கார்த்தி"!! 1

அன்றைய காலகட்டங்களில் சரித்திர படங்கள் மிக அதிகம் என்பதால், மக்கள் திலகம் இந்த படத்தை எடுக்க எண்ணினார். ஆனால் அவருக்கு அது கை கூடவில்லை. படிப்போருக்கு இந்த கதையில் மிகவும் கவரும் ஒரே பாத்திரம் என்றால் அது வந்திதேவனே. அதனாலேயே என்னவோ பலரும் அந்த கதாபாத்திரமே வேண்டும் என ஆசைப்பட்டனர். நடிகர் கமல்ஹாசன் உருவாக்கவிருந்த பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடிக்க விரும்பியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். இப்பொது அது மணிரத்னத்திற்கே நனவாகியுள்ளது. ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், நந்தினி, வந்தியத்தேவன், குந்தவை, பழுவேட்டவ சகோதர்கள், பூங்குழலி, ஆழ்வார் அடியான் என மிகவும் சிறந்த கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்கு மிக பெரிய சிறந்த நடிகர்களை கொண்டு அவர் எடுத்து முடித்துள்ளார்.

நேற்று இந்த மாபெரும் படத்தின் முதல் டீஸர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, இயக்குனர் மணிரத்னம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேடையில் பேசிய கார்த்தி, ” நான் துவங்கியது மணி சாரின் அசிஸ்டன்டா என்னுடைய வாழ்க்கையை துவங்கி இப்பொது மணி சார் படத்துலேயே நான் ஹீரோவா நடிக்கிறேன், அதுக்கு உண்மையாகவே அவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்”.

“நான் எல்லாருமே ஹிஸ்டரி கிளாஸ்’ல தூங்கிருவோம், ஆனா உண்மையாகவே நமக்கு தெரிஞ்சது நம்ம எப்படி சூறையாடப்பட்டோம், அடிமையா இருந்தோம் இது தான் நமக்கு சொல்லிக்கொடுத்தாங்க, ஆனா தமிழன் யார்’னு கேட்ட நமக்கு ஒன்னுமே தெரியாது. நிறைய தெரிஞ்சிக்கு வேண்டிய இருக்கு..அதெல்லாம் நமக்கு நிறையவே மணி சார் இந்த படம் மூலம் கொடுக்கிறார்.  உண்மையிலேயே தமிழன் தமிழன் சொல்ற நாம அந்த வரலாற தெரிஞ்சிக்கவே இல்ல..கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்…வரலாறு தெரிஞ்சிகிட்டா தான் நம்பலா வரலாறு படைக்கப்படும்” என கூறினார்.

Video Courtesy – Cinema5D

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்