Categories: சினிமா

ஞானவேலுக்குப் பின்னால் சிவகுமாரும், அவரது பிள்ளைகளும் இருப்பார்களோ என சந்தேகம் எழுகிறது

வெளியிட்டது

அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி இணையத்தில் பெரும் சர்ச்சையான நிலையில் அமீருக்கு ஆதரவாக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ‘பருத்திவீரன்’ படத்தில் பொய் கணக்கு எழுதி பணத்தை திருடி விட்டதாக இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல் ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இது இணையத்தில் மிகப் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் கரு. பழனியப்பன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “‘பருத்திவீரன்’ படம் பற்றியும் அமீர் பற்றியும் ஞானவேல் பேசிய பிறகு அந்த படம் தொடர்புடைய சசிகுமார், தயாரிப்பாளர் கணேஷ்ரகு, சமுத்திரகனி சுதா கொங்காரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்.

ஞானவேலுக்குப் பின்னால் சிவகுமாரும், அவரது பிள்ளைகளும் இருப்பார்களோ என சந்தேகம் எழுகிறது 1

இந்த அறிக்கை பருத்திவீரன் படம் என்பது பற்றி அல்ல, ஞானவேலின் பொய் குற்றச்சாட்டு பற்றி. பொன்வண்ணன் மொழியில் சொல்வது என்றால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி. எகத்தாளமாய் எப்படி இப்படி ஒருவரால் பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும், பொய்க்கணக்கு என்றும் எழுதுபவர் என்றும் சொல்கிறாரே? இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அதற்கு உடனிருந்த நான் சாட்சி. ‘பருத்திவீரன்’ தயாரிப்பில் 100 முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு இயக்குனரை பொதுவெளியில் திருடன் என்றும், ஒன்றும் தெரியாதவன் என்றும், என் காசில் தொழில் பழகியவன் என்றும் சொல்வது அயோக்கியத்தனம்.


அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும், உடன் களத்தில் பணியாற்றியவர்களும், ரசிகர்களும் ‘அமீரின் பருத்திவீரன்’ ‘அமீரின் பருத்தி வீரன்’ என்று சொல்லும் பொழுது அவர் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார் என்று பொருள். இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என சமுத்திரக்கனி கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்வி எழும்போதே ஞானவேலில் பின்னால் திரு. சிவக்குமாரும் அவர்கள் பிள்ளைகள் இருப்பார்கள் என்று சந்தேகத்தின் நிழல் விழுவதை தவிர்க்க முடியவில்லை.


தன் மகனுக்கு உலக தரத்தில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு சிவகுமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன? 18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா? ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்ல வேண்டும்_ சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன். அறத்தை நம்பி செயலாற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும் வணக்கமும்” என்று கரு. பழனியப்பன் கையெழுத்திட்டு அந்த அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்