Categories: சமூகம்

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!!

வெளியிட்டது
காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!! 1

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுான 370-ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதி என்வி ரமணா தலைமையில் நீதிபதிகள் எஸ்கே கௌல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று (டிச. 10) தொடங்க உள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்