கர்ப்பமான கயல் சீரியல் நடிகை.! கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு.!

வெளியிட்டது

இன்று காலை முதலே சின்னத்திரையைச் சேர்ந்த பிரபலங்கள் நல்ல செய்தியை கூறி வருகின்றனர். முதலில் சூப்பர் சிங்கரை சேர்ந்த அஜய் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். பிறகு பாண்டவர் இல்லம் நாடகத்தில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அனுவும் தனக்கு வளைகாப்பு நடந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அடுத்தபடியாக சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுதா இருவரும் காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தனர். தொடர்ந்து தற்போது கயல் சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபி நவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார். சின்னத்திரையில் ஜோடிகளாக இருக்கும் தீபக் மற்றும் அபி நவ்யா தாங்கள் பெற்றோராக போகும் செய்தியை தங்களது instagram பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர்.

கர்ப்பமான கயல் சீரியல் நடிகை.! கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு.! 1

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்கிற தொடரில் சுவாதி என்ற கதாபாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தவர் அபி நவ்யா. செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையில் தொடங்கிய அவர், சீரியல்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். தற்போது இவர் சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர் நடித்து வரும் கயல் சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்கிற தொடரில் சுவாதி என்ற கதாபாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தவர் அபி நவ்யா. செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையில் தொடங்கிய அவர், சீரியல்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். தற்போது இவர் சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர் நடித்து வரும் கயல் சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கும் அபி நவ்யாவுக்கும் சீரியல் நடிகர் தீபக்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தீபக்கும் அபியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தீபக் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்திருந்தார்.

பின்னர் என்றென்றும் புன்னகை என்கிற சீரியலில் நடித்திருந்தார். தற்போது அவர் ஈரமான ரோஜாவே சீசன் 2 விலும் நடித்து வருகிறார். தற்போது அபி கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருக்கிறார். தீபக்கும் அபியும் சேர்ந்து மெட்டர்னிட்டி புகைப்படத்தை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கர்ப்பமாக இருப்பதால் கயல் சீரியலில் தொடர்ந்து அபி நடிப்பாரா? இல்லை அவருக்கு பதில் வேறு யாரேனும் மாற்றம் செய்யப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Youtube Video Code Embed Credits: Indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்