சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி தான் அசத்தப்போவது யாரு. இது இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்னோடி. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி வந்த பிறகுதான் பல தொலைக்காட்சிகள் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலர் இன்று வெள்ளித்திரை வரை சென்று கலக்கி வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியவர் தான் விஜே மகேஸ்வரி. 16 வருடமாக தொலைக்காட்சிளில் இருக்கும் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சன்டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

பின்னர் சீரியல்களிலும் வெள்ளித்திரைகளிலும் நடிக்க தொடங்கினார். திருமணமான பின்பு சீரியலை விட்டு விலகிய அவர், தனது கணவருடன் விவாகரத்து ஆனதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் விளக்கி இருந்தார். கணவர் வீட்டில் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கண்ணீருடன் அவர் கூறியிருந்தார். சிறுவயதிலேயே அப்பாவை பிரிந்து அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வந்த மகேஸ்வரிக்கு, வெங்கட் என்பவருடன் திருமணம் முடிந்து கேசவ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் திருமணமான சில ஆண்டுகளில் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். சமூக வலைத்தள பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது போட்டோஷூட்டுகளையும் நடத்தி வருகிறார். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவ்வபோது ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தன் விவாகரத்து குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருந்தார். அதில் தன் கணவர் வீட்டில் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறினார்.

பெண் நண்பர்களுடன் பேசக்கூடாது, ஆண்களுடன் இணைந்து நடிக்க கூடாது என்று பல கண்டிஷன்கள் போட்டுள்ளார் அவரது கணவர். சீரியலில் நடித்தால் குடும்ப மானம் போய்விடும் என்று கூறி தன்னை வீட்டிலேயே ஒரு அடிமை போல வைத்திருந்தாகவும் மகேஸ்வரி கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக மகேஸ்வரி கலந்து கொண்டுள்ளார். சண்டை சச்சரவு என முன் கோப கார பெண்ணாக மகேஸ்வரி இருக்கிறார். தற்போது விவாகரத்து ஆன அவரின் கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Youtube Video Code Embed Credits: Avalglitz