Categories: சினிமா

மின்னலே பாடலுக்கு கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்த நடிகை கயல் ஆனந்தி..!

வெளியிட்டது

கயல் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகை கயல் ஆனந்தி. இவருக்கு மிகபெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போதுவரை இவர் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காததே இவருக்கு ரசிகர்கள் உருவாக காரணம் எனலாம். இவர் நடித்த முதல் படமே இவருக்கு ரசிகர்களிடம் கயல் என்ற முகவரியை பெற்று கொடுத்து உள்ளது. இதனால் தற்போது வரை இவர் கயல் ஆனந்தி என்று தான் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்னலே பாடலுக்கு கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்த நடிகை கயல் ஆனந்தி..! 1

இப்படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள், ராவண கோட்டம் , த்ரிஷா இல்லைனா நயன்தாரா என பல படங்களில் நடித்து உள்ளார் இவர். அண்மையில் இவர் கதையின் நாயகியாக நடித்திருந்த மங்கை படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஈடுபாடு காட்டாத இவர் நல்ல கதைகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு செம்ம கியூட்டாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இது இவரின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் வீடியோ செம்ம கியூட்டாக இருப்பதாக கயல் ஆனந்தியை பாராட்டி வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்