சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலாக இருக்கும் கயல் சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. இந்த சீரியலில் தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. தற்போது சில நாட்களாக அந்த பரபரப்பையும் மீறி கயல் உயிர் பிழைப்பாரா? எழில் வந்து அவரை காப்பாற்றுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

எழிலும் கயலும் பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது எழிலுக்கு கயலின் பெரியப்பா மகள் ஆர்த்தியை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவெடுக்கின்றனர். தற்போது எழில் – ஆர்த்தி திருமண வரவேற்பு நடைபெற்று வருகிறது.
இந்த திருமண வரவேற்பின் போது எழிலின் தாயார் சிவசங்கரி கயலுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை கயல் கண்டுபிடித்து விடுகிறார். இந்த நிலையில் அவர் கௌதமை வரவழைத்து கயலை கடத்தி அவரது கதையை முடித்து விடுமாறு கூறுகிறார். அதேபோல் தற்போது கௌதமும் கயலை கடத்தி கயிற்றில் அந்தரத்தில் தொங்க விட்டிருக்கிறார். அவரது காலுக்கடியில் ஐஸ்கட்டியையும் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயல் கடத்தப்பட்டிருக்கும் விஷயம் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தனது நண்பரிடம் உண்மைகளை மறைக்கச் சொல்கிறார் எழில். பின்னர் காரை எடுத்துக்கொண்டு தன் கயலைத் தேடி அலைகிறார்.!
இதற்கிடையில் கயலின் தம்பி கயல் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வருகிறார். அவர் மோதிரத்தை காணவில்லை என்று தேடி வருகிறார். அப்போது ஒரு பொருள் கீழே விழுகிறது. சத்தம் கேட்டு அவர் திரும்பி பார்க்கிறார். இதனால் அடுத்மி என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. அந்த பரபரப்புடன் தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV