“அன்பு மகத்தானது..!” விக்ரமன் போட்ட பதிவு.! அறம் முடிந்து அன்பா? கலாய்க்கும் நெட்டிசன்கள். !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் அறியப்படும் நபராக இருப்பவர் விக்ரமன். ஏற்கனவே அரசியல் நெறியாளர், செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகர் என்று பல பின்னணி கொண்ட இவருக்கு மிகப் பரிட்சியத்தை கொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். அரசியல்வாதி என்ற அடையாளத்துடன் பிக்பாஸில் கலந்து கொண்ட முதல் போட்டியாளர் இவர்தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு இரண்டாவது இடமே கிடைத்தது.

"அன்பு மகத்தானது..!" விக்ரமன் போட்ட பதிவு.! அறம் முடிந்து அன்பா? கலாய்க்கும் நெட்டிசன்கள். ! 1

விளம்பரம்

விக்ரமனை சுற்றி ஏதாவது ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. பிக்பாஸில் இவர் கூறிய அறம் வெல்லும் என்கிற வசனம் மிகப் பிரபலமானது. ஆனால் சமீப காலமாக அவருக்கு புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த விக்ரமன் மீது லண்டனைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, காதலித்து ஏமாற்றியதாகவும், லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டு ஏமாற்றியதாகவும் புகார் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக 15 பெண்களை விக்ரமன் ஏமாற்றி இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலிப்பது போல நாடகமாடி ஏமாற்றியதாகவும் அவர் புகைப்படம் மற்றும் whatsapp ஆதாரங்களை முன் வைத்து குற்றம் சாட்டியிருந்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இது குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் தலைவர் திருமாவளவனிடம் இது குறித்து முறையிட்டிருப்பதாகவும் கிருபா ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கழுத்தில் தாலி ஏறியதும் கண்ணீர் விட்டு அழுத சம்யுக்தா.! திடீரென திருமணம் செய்து கொண்ட சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர்கள்.!

"அன்பு மகத்தானது..!" விக்ரமன் போட்ட பதிவு.! அறம் முடிந்து அன்பா? கலாய்க்கும் நெட்டிசன்கள். ! 3

இது அவரது பிக்பாஸ் ரசிகர்களுடைய மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு விளக்கம் கொடுத்த விக்ரமன், தன் அரசியல் வாழ்க்கை கெடுப்பதற்காக இதுபோன்ற நாடகம் ஆடப்படுவதாக விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது insta பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் மக்கள் விக்ரமனுக்கு ஒரு சிறிய பரிசை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதில், “வெற்றியாளர்கள் எப்பொழுதுமே விட்டு விலகுவதில்லை” என்று வசனங்கள் அடங்கிய ஒரு புகைப்படம் இருந்ததது.

விளம்பரம்

அந்த வீடியோவை பதிவிட்ட விக்ரமன் “எளிய மக்களின் அன்பு மகத்தானது” என்று டைட்டிலுடன் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் அறம் முடிந்தது, இப்போது அன்பா என்று கேட்டு அவரது கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்.!

 

View this post on Instagram

 

A post shared by Vikraman R (@vikraman_r_official)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment