ஆர்த்தியை ஏமாற்றிவிட்டு கயல் கழுத்தில் தாலி கட்டிய எழில்.! இந்த ட்விஸ்டை எதிர்ப்பார்க்கவே இல்லையே.!

வெளியிட்டது

மிகவும் எதிர்பார்த்த சன் தொலைக்காட்சியின் கயல் சீரியலில் எழில் கயல் திருமணம் தற்போது நடைபெற்றிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென கயல் கழுத்தில் தாலி கட்டி சபையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் எழில். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது கயல் சீரியல். இது தற்போது டிஆர்பி ரேட்டிங்கலும் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து வருகிறது. நடிகர் சஞ்சீவ் எழில் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகை சைத்ரா ரெட்டி கயல் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த சீரியரின் டிஆர்பி ரேட்டிங்கின் வெற்றிக்கு காரணம் கயல் எழில் திருமணம் நடைபெறுமா என்பது குறித்த பரபரப்பு தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்த்தியை ஏமாற்றிவிட்டு கயல் கழுத்தில் தாலி கட்டிய எழில்.! இந்த ட்விஸ்டை எதிர்ப்பார்க்கவே இல்லையே.! 1

கயலும் எழிலும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். எழில் தனது காதலை வெளிப்படுத்திய போதும் கயல் பிடிவாதமாக எழில் தனக்கு நண்பர் தான் என்று சொல்லி பிடிவாதமாக இருக்கிறார். இருப்பினும் கயலுக்கும் எழிலுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இதை கயல் வெளியில் சொல்லாமல் இத்தனை காலம் மறைத்து வருகிறார். இதற்கிடையில் கயலின் பெரியப்பா மகளான ஆர்த்திக்கும் எழிலுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கயல் தனது காதலை சொல்லிவிட்டால் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு கயலை திருமணம் செய்து கொள்வேன் என்று எழில் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையில் கயலை எழிலின் தாயார் சிவசங்கரி,கௌதமை வைத்து கடத்துகிறார் தற்போது கயலை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் எழில்.

தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவில் எழில் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்ட முயற்சி செய்யும்போது நடுவில் கயல் அமர்ந்திருக்க அவர் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதனால் பரபரப்பு எழுந்திருக்கிறது் கயலின் தாயார் சிவசங்கரியும் ஆர்த்தியின் தாயார் வடிவும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்