இந்த லூசு பயலுக்கும் ஒரு மனசு இருக்கு ஆதிரை.! அனைவரையும் அழ வைத்த கரிகாலன்.!

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கரிகாலன் தற்போது ஆதிரையிடம் என்னை அனைவரும் லூசு என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த லூசு பயலுக்கும் ஒரு மனசு இருக்கு என்று சோகமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜீவானந்தம் யார்.? அவருக்கும் அப்பத்தாவிற்கும் என்ன தொடர்பு.? ஏன் அப்பத்தாவின் சொத்தை அவர் தனதாக்கிக் கொண்டார் என்பதெல்லாம் புரியாமலேயே ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். ஒரு புறம் சொத்து அனைத்தையும் இழந்த குணசேகரன் மருமகள்கள் ஜீவானந்தத்திடம் பேசி சொத்தை மீட்டு வரும்வரை கை செயலிழந்தது போல நாடகமாடிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் ஜனனி ஜீவானந்தத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லூசு பயலுக்கும் ஒரு மனசு இருக்கு ஆதிரை.! அனைவரையும் அழ வைத்த கரிகாலன்.! 1

விளம்பரம்

இதற்கிடையில் கரிகாலனை கட்டாய திருமணம் செய்து கொண்ட ஆதிரை அவருடன் இணைந்து வாழாமல் தனக்கு அருண் தான் முக்கியம் என்று சொல்லி அவரை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார். அப்போது அருண் காலில் விழுந்து கதறியும், இனிமேல் ஆதிரை என்கிற பெண் தனது வாழ்க்கையில் இல்லை என்று சொல்லி அவரை வீட்டில் அருண் இருந்து வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் மனமுடைந்து போகிறார் ஆதிரை. மற்றொருபுறம் கரிகாலன் மற்றும் அவரது தாயார் குணசேகரனின் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். கரிகாலன் இன்னும் தன்னுடன் ஆதிரை இணைந்து வாழவில்லை. எனவே அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று குடும்பத்தினரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். கரிகாலனின் தாயார் ஜான்சி ராணியும் ஆதிரையை அழைத்துப் போகும் வரை அங்கேயே அமர்ந்திருக்க போவதாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  ஹே ச்சீ கிளம்பு காத்து வரட்டும்.! அமுதவாணன் மைனாவுக்கு இடையில் நடந்த பயங்கர சண்டை.!

இந்த லூசு பயலுக்கும் ஒரு மனசு இருக்கு ஆதிரை.! அனைவரையும் அழ வைத்த கரிகாலன்.! 3
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு போன் செய்து பேசுகிறார். அப்போது நீங்கள் குணசேகரனின் மனைவி என்பதற்காக உங்களிடம் நான் போன் பேசவில்லை, ஈஸ்வரி என்பதற்காக தான் பேசுகிறேன் என்று கூறுகிறார். மறுபுறம் கரிகாலன் ஆதிரையிடம் இந்த வீட்டில் உள்ள அனைவரும் தன்னை லூசு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லூசுக்கு பயலுக்குள்ளும் ஒரு மனசு இருக்கிறது என்று கூறுகிறார். இதை கேட்ட அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment