கயல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு தற்போது இயக்குனர் கதையை வழவழவென்று இழுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கயலின் தம்பியாக இருக்கும் அன்பு தற்போது கடத்தப்பட்டு இருக்கிறார். ஒரு நாடகத்தில் திருப்பங்கள் இருக்கலாம். ஆனால் திருப்பங்களை மட்டுமே வைத்து கதையை இழுத்து அடிக்க முடியும் என்று கயல் சீரியலின் இயக்குனர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் இரவு நடக்கும் வரவேற்பை ஒரு மாதமாக இழுத்தடிக்க முடிந்த இயக்குனர் தற்போது ஒரு பகல் நடக்க இருக்கும் திருமணத்தை ஒரு மாதம் இழுத்தடிக்க முடிவு செய்துவிட்டார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு தற்போது கதை மந்தமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடக்க வேண்டும். ஆனால் அது எப்படி என்பதுதான் கதை சுவாரஸ்யத்திற்கு முக்கிய காரணம். ஆனால் அதற்காக இயக்குனர் கயலை கடத்துகிறார், கயலின் தம்பியை கடத்துகிறார், கயலின் அண்ணனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுவது போல் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் ரசிகர்களுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் நாளை காட்சிகளுடன் தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது எழிலின் தந்தை எழிலிடம் வந்து எப்படி கையில் கழுத்தில் தாலி கட்டப் போகிறாய் என்பதை சொல் என்று கேட்கிறார். அப்போது எழில் அவரிடம் ஏதோ ரகசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க கயலின் தம்பி அன்புவை காணவில்லை என்று பலரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது போன் செய்த போதும் போன் எடுக்கவில்லை. வெளியில் பார்த்தால் அவரை ரவுடிகள் சிலர் கடத்தி காரில் ஏற்றி சென்று கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து ரசிகர்கள் தற்போது மிகுந்த கடுப்பில் இருக்கிறார்கள். ஆனா ஊனா என்றால் ஆட்களை கடத்துகிறீர்கள்? இதைவிட்டால் வேறு கதையே தெரியாதா? ஒரு திருமணத்தில் எவ்வளவு பிரச்சனைகள்தான் வரும்? இது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா? என்று சொல்லி கோபத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV