“பல உலக அழகிகள் கூடி, உந்தன் பாதம் கழுவலாம் வாடி” கயல் சைத்ராவின் செம்ம Cute வீடியோ.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பாவாடை தாவணியில் அவர் வெளியிட்ட அந்த வீடியோவிற்கு லைக்குள் குவிந்து வருகிறது. சன் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் ஒரு தொடர் தான் கயல். இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். ஹீரோயினுக்கு இணையாக வில்லிக்கு இவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது சைத்ராவின் நடிப்பிற்காக மட்டுமே. தொடர்ந்து இவருக்கு அடுத்த சீரியல் சன் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கயல் சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பல உலக அழகிகள் கூடி, உந்தன் பாதம் கழுவலாம் வாடி" கயல் சைத்ராவின் செம்ம Cute வீடியோ.! 1
இந்த சீரியல் தொடங்கிய பல ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் இன்னும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியலை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு முதலிடத்தில் இருந்து வருகிறது. கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா என்ற சஸ்பென்ஸ் உடன் இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சில வாரம் எதிர்நீச்சல் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடிக்கும் போதிலும் மீண்டும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை துரத்தி வந்து பிடித்து விடுகிறது கயல் சீரியல். அதற்கு முக்கிய காரணமாக சைத்ரா ரெட்டியில் நடிப்புதான் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சைத்ரா அவ்ஒபோது ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது தோழிகளுடன் சேர்ந்து கொண்டு ரீல்ஸ் செய்வது, வெளியே அவுட்டிங் செல்வது, நடனம் ஆடுவது, காமெடி செய்வது என்று சைத்ரா மிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.


இந்த நிலையில் அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பச்சை பட்டு பாவாடை மற்றும் தாவணி உடுத்தி கோவிலுக்கு செல்வது போலவும், அப்போது பின்னணியில் சந்தன தென்றலை பாடல் ஒலிப்பது போன்றவும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் லைக்குகளை சைத்ராவிற்கு அள்ளி குவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை பார்க்க..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்