“நா ரெடி தான்” பாடலுக்கு புடவையில் மரண குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.!

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான “நான் ரெடி தான் வரவா” பாடலுக்கு புடவையில் இறங்கி ஆடி இருக்கிறார். அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் சீரியலாக சில வருடங்களாக ஒளிபரப்பாகயகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கதாநாயகனில் இரண்டாவது மனைவியாகவும் மற்றும் வில்லியாகவும் நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஏதாவது ஒரு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது நடனமாடும் புது வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நா ரெடி தான்" பாடலுக்கு புடவையில் மரண குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.! 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விமான பணி பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ரேஷ்மா. பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்கிற சீரியலின் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். இவருடைய தந்தை பிரசாத் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆவார். தனது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்திற்கு பின்னர் ரேஷ்மா மிகப் பிரபலமானார். இதுவே அவருடைய முதல் திரைப்படம். முதல் திரைப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்ற அவருக்கு பின்னர் எந்த ப்ராஜெக்ட்டும் சரியாக கை கொடுக்கவில்லை. எனவே அவர் பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 3யில் முக்கிய போட்டியாளராக இருந்த அவருக்கு இறுதிவரை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். வெளியே வந்த பின்னர் அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்புடையவை  நிரந்தரமாக முடிவுக்கு வந்த அப்பத்தா கதாப்பாத்திரம்.? ப்ரோமோவை வெளியிட்ட சூசக அறிவிப்பு.?

"நா ரெடி தான்" பாடலுக்கு புடவையில் மரண குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.! 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வரும் ரேஷ்மாவிற்கு அடுத்தது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக அக்டிவாக இருக்கும் ரேஷ்மா அப்போது ஏதாவது ஒரு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது “நா ரெடி தான் வரவா” பாடலுக்கு புடவையில் இறங்கி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்மில் பகிர்ந்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment