கயல் சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் தொடர்ந்து கயல் மற்றும் எழில் திருமணம் நடைபெறுமா என்கிற எதிர்பார்ப்புடனேயே அந்த ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்த வருடத்திற்குள் எழில் மற்றும் கயலின் திருமணத்தை முடித்து விடுவீர்களா என்றும் ரசிகர்கள் கமெண்ட்களில் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தற்போது எழில் மற்றும் கயல் இருவருக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. எழில், கயல் உடனான பிரச்சனையால் அவரது பெரியம்மா மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருமண மண்டபத்திற்கு வரும் கயல் எப்படியாவது எழிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனதில் ஆசையுடன் நினைத்துக் கொண்டிருக்கிறார். தன் காதலை சொல்லவும் முடியாமல், இந்த திருமணத்தை நிறுத்தவும் முடியாமல் படாத பாடு பட்டு வருகிறார் கயல். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயலின் தம்பியும் அவரின் அக்கா கணவரும் இணைந்து கயலுக்கும் எழிலுக்கும் திருட்டுத்தனமாக திருமணம் செய்து வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை ஆர்த்தியின் அப்பாவும் கயலின் பெரியப்பாவுமான தர்மலிங்கம் பார்த்து விடுகிறார். இதனால் மீண்டும் சண்டை எழும் என்று தெரிகிறது. கயல் மற்றும் எழில் திருமணம் நடைபெறுமா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்த பலரும் இந்த ஒரு கதையை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஓட்டுவீர்கள்? என்று மிகுந்த கடுப்பாகி இருக்கின்றனர். சஸ்பென்ஸ் இருக்கலாம் ஆனால் இது ஓவர் அறுவையாக இருப்பதாக சொல்லி ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below Video..!
Youtube Video Embed Code Credits: Sun Tv