ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி அறைந்த ஈஸ்வரி.! கரிகாலனை விரட்டி விரட்டி வெளுக்கும் சக்தி.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் ஜான்சி ராணியை ஈஸ்வரி ஓங்கி ஒரு அறை விடுகிறார். தொடர்ந்து கரிகாலனை சக்தி அடித்து துவைக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. குணசேகரனின் கடைசி தங்கையாக இருக்கும் ஆதிரையை ஜான்சி ராணியின் மகனான கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் ஆதிரை கரிகாலனுடன் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி, தான் காதலித்து வந்த அருணின் வீட்டில் சென்று தஞ்சம் புகுந்து விடுகிறார். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி அறைந்த ஈஸ்வரி.! கரிகாலனை விரட்டி விரட்டி வெளுக்கும் சக்தி.! 1
இந்த நிலையில் தனக்கு நீதி வேண்டும் என்று சொல்லி கரிகாலன் குணசேகரனிடம் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். எனவே குணசேகரன் தனது மகள் தர்ஷினியை திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். ஆனால் தர்ஷினி பள்ளி படித்துக் கொண்டிருக்கும் மாணவி என்பதால் படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். ஆனால் அதுவரை பொறுமை காக்காத கரிகாலனும், ஜான்சி ராணியும் பள்ளியிலிருந்து தர்ஷினி திரும்பிக் கொண்டிருந்த தர்ஷினியை வழிமறித்து கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஈஸ்வரி ஜான்சி ராணியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கடைசியாக அமர்ந்திருந்த இரண்டு பேர்.! கார்டை காட்டிய கமல்.! வெளியேறியது யாருனு தெரியுமா?

ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி அறைந்த ஈஸ்வரி.! கரிகாலனை விரட்டி விரட்டி வெளுக்கும் சக்தி.! 3
மேலும், “தர்ஷினியை கடத்திக் கொண்டு போய் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்” என்று கரிகாலன் திமிராக பேசிக் கொண்டிருக்க, கடுப்பான சக்தி கரிகாலனை ஓடவிட்டு அடிக்கிறார். மேலும் வெளியே தள்ளி அவரை நெஞ்சிலேயே ஏறி மிதிக்கிறார். இதனால் மீண்டும் சண்டைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment