கயலின் கழுத்தில் கயிறை கட்டி அந்தரத்தில் தொங்கவிட்ட கெளதம்.! கயலை தேடி அலையும் எழில்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அடுத்த பரபரப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த திருப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கௌதம் கயலை கடத்தி அவர் கழுத்தில் கயிறை கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு இருக்கிறார். அவரை தேடி எழில் ஒரு பக்கம் அலைந்து கொண்டிருக்கிறார். இதனால் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. சன் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கும் ஒரு தொடர் தான் கயல். இந்தத் தொடரில் நடிகர் சஞ்சீவ் கார்த்திக், எழில் என்கிற கதாபாத்திரத்திலும், நடிகை சைத்ரா ரெட்டி கயல் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயலின் கழுத்தில் கயிறை கட்டி அந்தரத்தில் தொங்கவிட்ட கெளதம்.! கயலை தேடி அலையும் எழில்.! 1

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த எழில் ஏழை பெண்ணாக இருக்கும் கயலை திருமணம் செய்வானா? அவன் காதலை நிரூபிப்பானா? என்பது ரசிகர்களிடையே எழுந்திருக்கும் பரபரப்பிற்கு காரணம். சில காரணங்களால் தற்போது எழில் கயலின் பெரியப்பா மகளாக இருக்கும் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது.்ஆனால் கயல் கழுத்தில் தான் எழில் தாலி கட்டுவான் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஆனால் கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக எழிலின் திருமண வரவேற்பில் பல பிரச்சினைகள் நடப்பது போல கதை நகர்ந்து வருவதால் ரசிகர்களுக்கு சிறிது சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே தற்போது அடுத்த பிரச்சனையாக எழிலின் தாயார் சிவசங்கரி கௌதமை வைத்து கயலை கடத்தி விடுகிறார். மேலும் கயலின் கதையை முடித்து விடுமாறும் அவர் கூறுகிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கயலின் கழுத்தில் கயிறை கட்டி கௌதம் அந்தரத்தில் தொங்க விட்டிருக்கிறார். மேலும் அவர் காலடியில் ஐஸ்கட்டியும் வைத்திருக்கிறார். ஐஸ் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கயலின் கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கான முயற்சிகளை அவர் இவ்வாறு மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் கயலை காணாமல் தேடி எழில் அழைக்கிறார். அப்போது பெட்ரோல் பங்கில் அவருக்கு ஒரு நம்பர் கிடைக்கிறது. அந்த நம்பருக்கு எழில் போன் செய்கிறார் இப்போது கௌதம் கும்பலில் இருந்து ஒருவர் அந்த போனை எடுக்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவ்வாறாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்