பொம்பளைங்க எதுக்குயா போகணும்? ஆம்பள எல்லாம் போய் ஆடுங்க.! Thug Life செய்த ரேணுகா.!

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மருமகள்கள் தான் சென்று சொத்தை மீட்டு வர வேண்டும் என்று குணசேகரன் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், ரேணுகாவும் ஜனனியும் இணைந்து தற்போது கோபமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. சின்னத்திரை உலகில் டாப் ஹிட் தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். எந்த சீரியலும் செய்யாத சாதனையாக 11.16 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று கடந்த வாரங்களில் சாதனை படைத்திருந்தது தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது பல திருப்பங்கள் நடந்து வருகிறது. குணசேகரன் அப்பத்தாவின் 40% பங்குகள் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றப்பட்டதிலிருந்து பிரச்சனை ஒன்றன்பின் ஒன்றாக எழத் தொடங்கியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொம்பளைங்க எதுக்குயா போகணும்? ஆம்பள எல்லாம் போய் ஆடுங்க.! Thug Life செய்த ரேணுகா.! 1

விளம்பரம்

தற்போது வீடும் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தியை அறிந்து கொண்ட ஆதி குணசேகரனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பக்கவாதம் வந்து வலது பக்கம் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பின்னர் வீட்டிற்கு வரும் குணசேகரன் தற்போது தனது தாயாரை பார்த்து கண் கலங்கி பேசிக் கொண்டிருக்கிறார் தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று சொல்லி அவர் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தனது தாயாரிடம் இந்த வீட்டின் மருமகள்கள் தான் சேர்ந்து ஜீவானந்திடமிருந்து சொத்துக்களை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போது, ரேணுகா நாங்கள் எதற்காக போக வேண்டும்? அதான் வீட்டில் இத்தனை ஆம்பளைகள் இருக்கிறீர்களே நீங்கள் சென்று வாங்கி வாருங்கள் என்று நக்கலாக பதில் அளிக்கிறார்.

தொடர்புடையவை  14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காயத்ரி, யுவராஜ் தம்பதிகள்.! தடபுடல் விருந்துடன் கொண்டாட்டம்.!

பொம்பளைங்க எதுக்குயா போகணும்? ஆம்பள எல்லாம் போய் ஆடுங்க.! Thug Life செய்த ரேணுகா.! 3

விளம்பரம்

இதனால் கடுப்பான ரேணுகாவின் கணவர் ஞானம் ரேணுகாவை அடிக்கப் போகிறார். அப்போது கோபத்துடன் கத்தும் ஜனனி யாரும் சண்டை போட வேண்டாம், அந்த சொத்துக்களையும் நாங்கள் சென்று நீட்டு வருகிறோம் என்று கத்துகிறார். பின்னர் தனது தம்பிகளிடம் பேசும் ஆதி குணசேகரன் மருமகள்கள் பெயரில் இருந்த சொத்துக்களை நாம் நம் பெயரில் மாற்றினோம் அல்லவா? என்று ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் மீண்டும் மருமகள்கள் பெயரில் சொத்துக்களை மாற்றி எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment