14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காயத்ரி, யுவராஜ் தம்பதிகள்.! தடபுடல் விருந்துடன் கொண்டாட்டம்.!

நடிகை காயத்ரி யுவராஜுக்கு தற்போது திருமணம் ஆகி 13 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் 14வது திருமண நாளை அவர் கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பல லட்சம் பார்வையாளர்களை அந்த வீடியோ பெற்று வருகிறது. 2009ம் ஆண்டு வெளியான ‘தென்றல்’ நாடகத்தின் மூலமாக தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் நடிகை காயத்ரி யுவராஜ். அதன் பின்னர் ‘அழகி’, ‘பொன்னூஞ்சல்’, ‘களத்து வீடு’, ‘மெல்ல திறந்தது கதவு’ போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார். பின்னர் 2016ம் ஆண்டு வெளியான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ யிலும் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காயத்ரி, யுவராஜ் தம்பதிகள்.! தடபுடல் விருந்துடன் கொண்டாட்டம்.! 1
பின்னர் ‘அரண்மனைக்கிளி’, ‘சித்தி 2’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ ஆகிய சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ‘மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை பார்ட் 3’ நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் பங்கெடுத்திருக்கிறார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலை விட்டு விலகி இருந்தார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர் நடன இயக்குனராக இருக்கும் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நடனப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தருண் என்கிற மூத்த மகனும் இருக்கும் நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  விக்ரமனின் வேற லெவல் நடிப்பு.! வாயடைத்து போன ஹவுஸ்மேட்ஸ்.! பிக்பாஸ் இன்றைய ப்ரோமோ.!

14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காயத்ரி, யுவராஜ் தம்பதிகள்.! தடபுடல் விருந்துடன் கொண்டாட்டம்.! 3
இந்த நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், 14 வது திருமண நாளை அவர்கள் கொண்டாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Gayathri From Aminjikarai

விளம்பரம்

Leave a Comment