முத்து கையால் இரண்டாவது முறை தாலி கட்டிக்கொண்ட மீனா.! ஆரத்தி எடுத்து வரவேற்ற விஜயா.! ப்ரோமோ உள்ளே.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் புதிதாக தாலி வாங்கி கொடுத்த முத்துவை தற்போது கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கும் மீனா, அவர் கையால் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தாலி கட்டி விட்டு வீட்டிற்கு வந்த முத்து மீனாவை விஜயா ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வரவேற்கிறார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்து கையால் இரண்டாவது முறை தாலி கட்டிக்கொண்ட மீனா.! ஆரத்தி எடுத்து வரவேற்ற விஜயா.! ப்ரோமோ உள்ளே.! 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. தனது கணவர் சம்பாத்தியத்தில் வாங்கிக் கொடுக்கும் தாலியை தான் நான் கட்டிக் கொள்வேன் என்று விஜயாவிடம் தனது நகைகளை திருப்பி கொடுத்துவிடுகிறார் மீனா. மேலும் விஜயாவால் மீனா மிகவும் அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் முத்து தனது மனைவிக்காக தற்போது புது தாலியை வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறார். அந்த தாலியை அவரது கையாலேயே கட்டிக் கொள்வதற்காக முத்துவை மீனா கோவிலுக்கு அழைத்து செல்கிறார். அங்கு தற்போது இருவருக்கும் இரண்டாவது முறையாக திருமணம் நடைபெறுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  விசாலாட்சியை எதிர்க்கத் துணிந்த சக்தி..! சக்தியின் கோபத்தைப் பார்த்து மிரண்டு போன விசாலாட்சி.!

முத்து கையால் இரண்டாவது முறை தாலி கட்டிக்கொண்ட மீனா.! ஆரத்தி எடுத்து வரவேற்ற விஜயா.! ப்ரோமோ உள்ளே.! 3
திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த புதுமண தம்பதிகளை ஆரத்தி எடுத்து வரவேற்குமாறு விஜயாவிடம் அண்ணாமலை கூற, விஜயாவும் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். பின்னர் விஜயா மற்றும் அண்ணாமலை காலில் முத்து மற்றும் மீனா இருவரும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர். இருவருக்குள்ளும் தற்போது நெருக்கம் அதிகரித்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment