ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் “ஜவான்” படத்தின் First Single “வந்த எடம்” வெளியானது.!

இயக்குனர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்திலிருந்து தற்போது முதல் சிங்கிள் பாடலான “வந்த எடம்” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து தற்போது இந்தப் பாடல் சாதனை படைத்து வருகிறது. தமிழ் திரையுலகில் நான்கே படங்களை இயக்கி இருந்தாலும் நான்கு படங்களையும் வெற்றி படங்களாக மாற்றி காட்டியவர் இயக்குனர் அட்லி. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு தரமான படங்களை திரையுலகத்திற்கு கொடுத்திருக்கிறார். இவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி மிகப்பெரிய வெற்றி அடையவே அடுத்த மூன்று படங்களையும் தொடர்ந்து விஜயை வைத்து வெற்றிப் படங்களாக கொடுத்திருக்கிறார். தற்போது இவர் முதல் முறையாக பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் "ஜவான்" படத்தின் First Single "வந்த எடம்" வெளியானது.! 1

விளம்பரம்

இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும், அவர்களுடன் பிரியாமணி யோகி பாபு என பல தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர் அதிரடி ஆக்ஷனாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக அனிருத்தும் நயன்தாராவும் பாலிவுட்டிற்கு அறிமுகமாகின்றனர். இந்த படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் ஆகிய இருவரும் இணைந்து படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இருக்கின்றனர். படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

தொடர்புடையவை  ஹெலிகாப்டரில் இருந்து திடீரென குதித்து, பயத்தில் அலறிய பிரியா பவானி ஷங்கர்..

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் "ஜவான்" படத்தின் First Single "வந்த எடம்" வெளியானது.! 3
இந்த நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. சமீபத்தில் குட்டி டீசர் ஒன்றை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டு இருக்கிறது. “வந்த எடம்” எனத் தொடங்கும் இந்த பாடலுக்கு ஷாருக்கான் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவருடன் நடிகை பிரியாமணியும் இணைந்து ஆடியிருக்கிறார். பாலிவுட்டில் அறிமுகமான முதல் பாடலே தரமான பாட்டாக கொடுத்திருப்பதாக அனிருத்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: T-Series Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment