3 என்ற படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அனிருத். முக்கியமாக அனிருத் இசையமைத்து தனுஷ் பாடிய “கொலவெறி டி” பாடல் உலகளவில் பெரிய வெற்றியை பெற்றது. தனுஷால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தொடர்ந்து தனுஷின் தயாரிப்பில் வெளியான சிவா கார்த்திகேயன் படங்களான “எதிர் நீச்சல், மான் கராத்தே” போன்ற படங்களுக்கு இசைமயக்க நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசைமைப்பாளராக மாறிப்போனார்.

“வேலையில்லா பட்டதாரி,கத்தி,வேதாளம்,காக்கி சட்டை,பேட்ட,தர்பார்,மாஸ்டர்” என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். மேலும் பல இசை அமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடியும் கொடுத்துளளார். நடுவில் தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்தார்.
இப்பொது வரும் பெரிய நடிகர் படங்களில் இவர் தான் இசை என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு உச்சம் தொட்டுள்ளார். வரவிருக்கும் விக்ரம் படத்திற்கும் இவர் தான் இசை. அண்மையில் இவர் இசையில் பீஸ்ட்,கத்துவாக்குல ரெண்டு காதல், டான் போன்ற படங்களுக்கு இசையால் ரசிகர்களை ஆட்கொண்டார்.
அடுத்த வரவிருக்கும் ரஜினியின் “ஜெயிலர்”, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமையாக்க இவருக்கு பெரிய தொகை பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பொது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களின் இசையமைப்பாளர் திரு எம்.எம்.கீரவாணி அனிருத்தை போட்டுள்ள ஒரு ட்வீட் மிகவும் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவான் எம்.எம்.கீரவாணி. பெரிய படங்கள் என்றால் எப்போதுமே அங்குள்ள இயக்குனர்களுக்கு முதல் சாய்ஸ் இவரே. ராஜமௌலி அறிமுகமான முதல் படம் “student no.1” படம் துடங்கி இப்பொது கடைசியாக வெளியாகி 1000 கோடியை தாண்டி வசூலித்த ஆர்.ஆர்.ஆர். வரை இவரே இசை. பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு இவருடையது. தமிழில் சில படங்களில் மரகதமணி என்ற பெயரில் இசைமைத்துள்ளார்.
இப்பொது லாரன்ஸ் நடிக்கும் “சந்திரமுகி 2” படத்திற்கு இவர் தான் இசை. இசை ஜாம்பவானாக இயக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் அனிருத் இசையில் சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” படத்தில் இடம்பெற்றிருந்த “பே” பாடலை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். “டான்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘பே’ பாடல் போதை தரக் கூடியது. அனிருத் எப்போதுமே புதுமையானவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அனிருத், “லவ் யூ சார்” என நன்றி தெரிவித்துள்ளார்.