மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாள் நிறைவடைந்து இருக்கிறது. இதை முன்னிட்டு தற்போது கீர்த்தி சுரேஷ் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷிற்கு ராயல் என்ஃபீல்டு ரக பைக்கை எப்படி ஓட்டுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “கொடி பறக்கும் 50 நாட்கள்” என பதிவிட்டு இருக்கிறார். தற்போது அந்த வீடியோவிற்கு சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்திருக்கிறது. மேலும் அந்த வீடியோவை மட்டும் ஆறு மில்லியன் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் திரைப்படம். இது ஓடிடி தளத்தில் வெளியான பிறகு அதிக மக்களால் பார்க்கப்பட்ட 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது. அரசியலில் நடக்கும் சாதிய கொடுமைகள் குறித்து இந்த படம் விரிவாக பேசியிருந்தது. படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த போதிலும் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று 50-வது நாள் குறித்து பதிவட்டிருந்த மாரி செல்வராஜ் தனது தாய் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இந்த வெற்றியை பெற்றோர்களுக்கு சமர்ப்பித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து மாமன்னன் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் உதயநிதி ஸ்டாலின் தனக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் வீடியோவை பகிர்ந்து 50 நாளாக கொடி பறக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O