நடிகை நயன்தாரா, ஷாருக்கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தில் வரும் ‘ஹையோடா’ பாடலுக்கு அட்லீயின் மனைவியுடன் இணைந்து நடனமாடிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அப்போது அவரை அட்லீயின் நாய் கடிக்க வந்ததால் அவர் பதறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். அந்த வீடியோவை தற்போது கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர், அப்போது வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘ஜவான்’ திரைப்படத்திலிருந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘ஹையோடா’ பாடலுக்கு அட்லீயின் மனைவி பிரியாவுடன் இணைந்து நடனமாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அட்லீ அந்த வழியாக தனது நாயை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். நடனமாடிக் கொண்டிருந்த கீர்த்தி திடீரென நடனத்தை நிறுத்திவிட்டு நாய் குட்டியை கொஞ்சுவதற்காக ஓடுகிறார். அப்போது நாய்க்குட்டி அவரை கடிக்க துரத்துகிறது. அதனிடமிருந்து தெறித்துக் கொண்டு ஓடுகிறார். அதை பார்த்த ப்ரியா மற்றும் அட்லீ இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
இந்த வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O