Categories: சினிமா

புடவையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து தேவதை போல வந்து நடனம் ஆடிய கீர்த்தி சுரேஷ்

வெளியிட்டது

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடலுக்கு புடவையில் வந்து பட்டையை கிளப்பி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது என்ன மாயம் என்கிற படத்தில் முதன்முறையாக தமிழில் நடித்து அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் வெளியாக தாமதமானதால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் படம் முதன் முதலாக வெளியானது. முதல் படத்திலேயே பல ரசிகர்களை தன்வசம் ஆக்கினார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் வரும் செல்ல குட்டி உன்ன காண என்ற பாடலுக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் பலருக்கும் நேஷனல் க்ரஷாக மாறிப் போனார். தற்போது தமிழில் உள்ள பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புடவையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து தேவதை போல வந்து நடனம் ஆடிய கீர்த்தி சுரேஷ் 1
திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். விஜயுடன் பைரவா, சர்க்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், தனுசுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு திறப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு காவியத்தில் மகாநடி என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அப்படியே சாவித்திரியை இவர் பிரதிபலித்தார். இந்த படத்திற்கு பின்னர் இவரின் செல்வாக்கு அபரிமிதமாக உயர்ந்தது. தற்போது இவர் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார் கீர்த்தி. இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் புடவையுடன் தனது தோழியுடன் சேர்ந்து பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலுக்கு செம க்யூட்டாக ஆடுகிறார். அந்த வீடியோவை பார்த்த கீர்த்தி ரசிகர்கள் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்