வளைகாப்பு முடிந்த கையயோடு உயர் ரக சொகுசு காரை வாங்கிய செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அந்த வகையில் செவ்வந்தி சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியலின் கதாநாயகி திவ்யா ஸ்ரீதர் பெங்களூருவை சேர்ந்தவர். சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி, மகராசி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். கேளடி கண்மணி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கும் நடிகர் அர்னவுக்கும் காதல் மலர்ந்தது் சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் இந்த திருமணம் குறித்து அர்னவின் வீட்டிற்கு தெரியாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வளைகாப்பு முடிந்த கையயோடு உயர் ரக சொகுசு காரை வாங்கிய செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா.! 1

விளம்பரம்

திருமண புகைப்படங்களையும் கர்ப்பமாக இருப்பதையும் திவ்யா ஸ்ரீதர் instagram பக்கத்தில் அறிவித்தார். அங்கிருந்து பிரச்சினைகள் தொடங்கியது. இந்த புகைப்படங்களை அழித்து விடுமாறும், தனது வீட்டில் பேசும் வரை அமைதி காக்குமாறு தொடர்ந்து திவ்யாவை வற்புறுத்தி வந்துள்ளார் அர்னவ். பின்னர் செல்லமா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகையுடன் ஒரே வீட்டில் திவ்யாவுடன் வசிக்கத் தொடங்கி இருக்கிறார். பின்னர் பிரச்சினை பூதாகரமானது. இதை எதிர்த்து கேட்ட திவ்யாவை அர்னவ் கடுமையாக தாக்கி வயிற்றில் எட்டி உதைத்தார். இதையடுத்து போலீஸிடம் புகார் அளித்த பின் அர்னவ் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமினில் விடுதலையாகி மீண்டும் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார் இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதருக்கு சக நடிகர்கள் இணைந்து வளைகாப்பு நடத்தினர். அந்த வீடியோவையும் திவ்யா தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

விளம்பரம்

தனது வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும் நிலையிலும் திவ்யா தற்போது விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும் என்பதை திவ்யா நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரின் புது கார் வாங்கிய வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  முடிவுக்கு வருகிறது 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து வெளியான வீடியோ.!

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment