Categories: சினிமா

காந்தரியாக மாறிய கீர்த்தி … வேற லெவல் குத்து.. | Keerthy Suresh | Gandhari

வெளியிட்டது

தற்போது “காந்தாரி” படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பாடல் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதன் ப்ரோமோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடிப்பில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடலை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் இந்த பாடலை நீங்களும் காண..Watch the below video..

மலையாளத்தை தாய்மொழியை கொண்ட கீர்த்தி சுரேஷ். இவர் நடிக்க வந்து சில காலத்திலேயே நல்ல நடிகை என்று பெயர் வாங்கினார். நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை படமான மகா நடி என்ற படம் அவருக்கு பெயரும் புகழும் சேர்த்து அதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார். தற்போது இவர் தெலுங்கு படத்தில் காந்தாரி என்ற பாடலில் கலக்கியுள்ளார். இதன் ப்ரோமோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது.

காந்தரியாக மாறிய கீர்த்தி ... வேற லெவல் குத்து.. | Keerthy Suresh | Gandhari 1

இந்நிலையில் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் கதாபாத்திரத்தையும் தாண்டி தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கினார். “அண்ணாத்த” திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி நடித்தார். மேலும் செல்வராகவனுக்கு தங்கையாக சாணி காயிதாம் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படி ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி தற்போது தங்கை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்