சமூக வலைத்தளங்களை சில நாட்களாக ஆக்கிரமித்து உள்ள செய்தி விஜய் தனது காருக்கு இன்சூரன்ஸ் செய்யவில்லை என்பதுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சிவப்பு நிற மாருதி சுசுகி செலிரியோ என்ற காரில் வந்தார். இந்த காரின் நம்பர் ப்ளேட்டைப் பார்த்த நெட்டிசன்கள் அதை இணையத்தில் போட்டு பார்த்து அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என்று ஆதாரத்துடன் போட்டு கலாய்த்து எடுத்துவிட்டனர். அரசியல் பற்றி படங்களில் பேசும் விஜய் இவ்வாறு செய்யலாமா? இன்சூரன்ஸ் இல்லாத காரை ஓட்டி வந்த அவருக்கு என்ன தண்டனை என்பது போன்ற குரல்களும் எழத் தொடங்கின. ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்தியில் அவருடைய இன்சூரன்ஸ் மே 2022 வரை செல்லும் என்ற தகவல் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாரிக்கும் இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. விஜய் எப்பொழுதும் தனது படங்களில் சில இடங்களில் அரசியல் பேசுவது உண்டு. கத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை பற்றி அவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே போல் தலைவா படத்தில் அரசியல் உள்ளது என்று சொல்லி அந்த படம் வெளிவருவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்தார் விஜய். TWITTER Original Source From: RIAZ K AHMED
For the past few days, a news stating that #ThalapathyVijay's car insurance is still due has been doing the rounds on social media. Here is a copy of the insurance, in which it is clearly stated that the insurance is valid till May 28, 2022! pic.twitter.com/d9tfYuIaEM
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 21, 2022
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த விஜயை சுற்றி பல சர்ச்சைகள் நிகழ்ந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்று இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்து உள்ளனர். என்றுமே தளபதி விஜய் அவ்வாறு செய்ய மாட்டார் என்று மார் தட்டி மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.