Categories: சினிமா

அம்மா, பாட்டியுடன் பூர்வீக கிராமத்தில் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டிற்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.!

வெளியிட்டது

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது தாயார் மேனகா மற்றும் பாட்டி சரோஜா ஆகியோருடன் தங்கள் பூர்வீக கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு சென்று இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அம்மா, பாட்டியுடன் பூர்வீக கிராமத்தில் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டிற்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.! 1

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பிரபல நடிகையாக இருந்த மேனகா சுரேஷின் மகளாவார். இவர் 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்கிற தமிழ் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.


இதன் பின்னர் இவர் ரஜினி முருகன், தொடரி, பைரவா, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் நடிகையாக அறிமுகமான குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்து இருக்கிறார்.


தற்போது இவர் தெலுங்கில் இரண்டு படங்களும் தமிழில் இரண்டு படங்களும் நடித்து வருகிறார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் படத்திலும் மற்றும் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இன்று சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.


திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் திருக்குறுங்குடிக்கு சென்று வந்த அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களாக வெளியிட்டு இருக்கிறார். கீர்த்தி சுரேஷின் பூர்விக கிராமமான அந்த ஊரில் இருக்கும் தங்களது சொந்த வீட்டில் அமர்ந்து அவர் சில புகைப்படங்களையும் எடுத்து இருக்கிறார்.


மேலும் கீர்த்தி சுரேஷின் முன்னோர்களாள் வீட்டிற்கும் அருகில் உள்ள எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நம்பி ராயர் கோயிலுக்கும் சென்று அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு, நேர்மறை உணர்வை உணர்ந்ததாக பதிவிட்டிருக்கிறார்.


கீர்த்தி சுரேஷுடன் அவரது தாயார் மேனகா சுரேஷ் பாட்டி சரோஜா மற்றும் சகோதரி ரேவதி மற்றும் அவரது கணவர் ஆகியோர் உடன் சென்று இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் மில்லியன் லைக்ஸ்ஐ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்