இசை கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் கேரளா அரசின் சார்பில் வழங்கப்படும் ஹரிவராசனம் விருதினை இந்த ஆண்டு இசைஞானிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு இசைஞானியின் பெயர் அறிவிக்க்பட்டது.
இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருது புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான இளையராஜாவுக்கு சபரிமலை சந்நிதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கேரள அரசால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
அதே போல், ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.