Categories: சினிமா

நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்.! மாஸ் வசனம் பேசிய KGF தாத்தா திடீர் மரணம்.!

வெளியிட்டது

சமீப காலமாக திரைத்துறையில் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக நமக்கு பிடித்த நடிகர்கள் மரணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் கேஜிஎஃப் படத்தின் முக்கிய வசனம் ஒன்றை பேசிய தாத்தா தற்போது மரணமடைந்திருக்கிறார். இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கன்னட திரைப்படம் தான் கேஜிஎஃப். இது காந்தாரா வருவதற்கு முன்பு வரை அதிக வசூலை குவித்த படமாக இருந்தது. சமீபத்தில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. கதாநாயகன் யாஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும் படமாக இருப்பது இந்த படம்தான்ழ இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, போன்ற பலர் நடித்திருந்தனர். பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஹோம்ப்லே ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.

நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்.! மாஸ் வசனம் பேசிய KGF தாத்தா திடீர் மரணம்.! 1

இந்தப் படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் கே ஜி எஃப் இல் இருந்து யாஷ் எப்படி தப்பிக்கிறார் அதன் பிறகு அவர் எவ்வாறு மிகப்பெரிய தாதா ஆகிறார் என்பதெல்லாம் விறுவிறுப்புகளை கூட்டி இருந்தது. மேலும் இந்த படத்தில் மூன்றாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கேஜிஎஃப் படத்தில் கிருஷ்ணா ஜி ராவ் என்கிற நடிகர் தற்போது காலமாகி இருக்கிறார். கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தில் கண் பார்வை தெரியாத நபராக இவர் நடித்திருப்பார். அவர் பேசிய ஒரு வசனம் என்று வரை கெத்தாக இருக்கிறது. ஹீரோ யாஷுக்கு கூடவே இருக்கும் அவர் கடைசிவரை அந்த படத்தில் நடித்திருப்பார். ரவுடி ஒருவர் வந்து யாஷ் பற்றி கேட்கும் போது கிருஷ்ணா ஜி பேசும் அந்த வசனம் செம கெத்தாக இருக்கும்.

இரண்டாவது பாகம் ட்ரைலர் வெளியானபோது உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன் சார், நீங்கள் மட்டும் அவன் குறுக்கே போய்டாதீங்க சார் என்று சொல்லுவார். இந்த வசனம் பலராலும் ரீல்ஸ் செய்யப்பட்டு instagram-ல் வெளியிடப்பட்டிருந்தது. ஒரே ஒரு டயலாக் பேசி இருந்த போதிலும் ரசிகர் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தார் கிருஷ்ணராவ். இந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்திருக்கிறார்.

சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார். அவர் இறந்த செய்தி கேட்டு பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்