தரமான சம்பவம் செய்துள்ள ஏஆர் ரஹ்மான்..! பத்து தல படத்தில் இருந்து அடுத்த பாடல் வெளியானது.!

நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்திலிருந்து தற்போது அடுத்த பாடல் வெளியாகியுள்ளது. தர லோக்கலில் தந்தனக்கா என்று செம்ம பீட்டுடன் இந்த பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வரை சுமார் 47 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதற்கு முன்பாக அவர் நடித்த மாநகரம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. சில காலமாக இடைவெளி எடுத்திருந்த சிம்புவிற்கு மாநகரம் படம் திருப்பு முனையாக அமைந்திருந்தது. தொடர்ந்து அவர் கொரோனா குமார், பத்துதல போன்ற படங்களை கைவசம் வைத்திருந்தார். கொரோனா குமார் திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. அந்த படத்தை சிம்பு கைவிட்டு விட்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தரமான சம்பவம் செய்துள்ள ஏஆர் ரஹ்மான்..! பத்து தல படத்தில் இருந்து அடுத்த பாடல் வெளியானது.! 1

விளம்பரம்

நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் படங்களின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் படத்தில் இருந்து டீசர், ட்ரெய்லர் முதல் சிங்கிள் பாடல் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் முதல் சிங்கிளான “நம்ம சத்தம்” கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்புடையவை  உங்களுக்கு அரசியல் வேணாம்..சினிமாலேயே இருங்க..கமலை மறைமுகமாக விமர்சித்து வானதி போட்ட ட்வீட்..

தரமான சம்பவம் செய்துள்ள ஏஆர் ரஹ்மான்..! பத்து தல படத்தில் இருந்து அடுத்த பாடல் வெளியானது.! 3

விளம்பரம்

மேலும் இந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலாக “நினைவிருக்கா” என்ற பாடல் வெளியாகி இருந்தது. இதில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க அவரது மகன் அமீன் இந்த பாடலை பாடியிருந்தார். அதன் பின்னர் படத்தில் இருந்து மூன்றாவது பாடலாக “ராவடி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் நடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகை சாயிஷா மரண குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த நிலையில் கடைசி பாடலாக ஒசரட்டும் பத்து தல என்ற பாடல் வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களில் பல்லாயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது இந்த பாடல். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் பாடலை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment