Categories: சினிமா

H.வினோத்துடன் இணைந்து கமல் நடிக்கும் 233வது படத்திலிருந்து வெளியான மாஸ் வீடியோ..!

வெளியிட்டது

உலகநாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் 233வது திரைப்படமான KH233 என்ற திரைப்படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில்கமலஹாசன் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக இந்திய திரையுலகில் ஒரு நடிகர் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது கமலஹாசன் தான். கலைஞானியாகவும், உலக நாயகனாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், கமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

H.வினோத்துடன் இணைந்து கமல் நடிக்கும் 233வது படத்திலிருந்து வெளியான மாஸ் வீடியோ..! 1
இது மட்டும் அல்லாமல் பிக்பாஸ் சீசன் 7ம் அவரே தொகுத்து வழங்க இருக்கிறார். தற்போது கைவசம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மாலிக திரைப்படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு திரைக்கதையை அவரே எழுத இருக்கிறார். கமலஹாசனை வைத்து படம் இயக்க பா. ரஞ்சித்தும் வெற்றிமாறனும் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்க, அடுத்ததாக தனது 234 வது படமாக மணிரத்தினத்துடன் இணைகிறார் கமலஹாசன் 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து இருக்கிறார். ஏற்கனவே 233வது படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

இந்தப் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரிக் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து புதிய கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக் குழுவினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதில் நடிகர்கள் பலர் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட கமலஹாசனின் ராணுவ உடையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டு குறி பார்த்து சுட்டு பயிற்சி செய்வது போல மிரட்டலான வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits:  rkfi

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்