தளபதி விஜய் நடித்துவரும் 67-வது திரைப்படமான லியோ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். முதல் சிங்கிள் பாடலாக “நா ரெடி தான் வரவா” பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் எனவும், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி நடக்க இருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது இரண்டாவது சிங்கிள் குறித்து அனிருத் பேசியுள்ள காணொளியால் விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கின்றனர்.

இன்று ஜவான் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த இசையமைப்பாளர் அனிருத், “இரண்டாவது சிங்கிளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அதற்காக பணியாற்றி வருகிறேன். அடுத்த வாரம் அப்டேட் கிடைத்து விடும் என கூறிவிட்டு சென்றார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது. விரைவில் டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்ப்பபடுகிறது.
Now It's Offical Second Single For Leo, Next week Song Gonna Be Treat For Everyone @anirudhofficial 🎶❤️~ @actorvijay 👑🔥pic.twitter.com/fWnKIg52Uh
— TD….❥ (@MiniiGirl__) September 7, 2023